பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! ஹமாஸுக்கு டிரம்ப் கோரிக்கை
காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான முயற்சியில், இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
டிரம்ப் வலியுறுத்தல்
காசா பகுதியில் இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஹமாஸ் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில், காசா மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதில் “ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவித்து போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வரவேண்டும்" என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறினார்.
போர் நிறுத்தம் தொடர்பான இறுதி முடிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அணு ஆயுத சர்ச்சை தொடர்பாக ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், டிரம்பின் சமீபத்திய அறிக்கை காசாவில் நடந்து வரும் சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |