ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா நேற்று (வியாழக்கிழமை) உக்ரைன் மீது மிகப்பாரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
574 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்ட இந்த தாக்குதலில். அமெரிக்க நிறுவனமான Flex உட்பட பல குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
உக்ரைன் ஜனாதிபதி இதை அமெரிக்காவை அவமதிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இதற்கு உக்ரைன் "பதிலடி கொடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
"நம் மீது படையெடுத்த எதிரியை தாக்காமல் யுத்தத்தை வெல்ல முடியாது" என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனில் படைகளை நிலைநிறுத்தும் திட்டங்களை ஏற்கமுடியாது என கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |