புடின் நெருப்புடன் விளையாடுகிறார்! நான் இல்லையென்றால் மோசமான..எச்சரித்த ட்ரம்ப்
உக்ரைன் அமைதி முயற்சிகள் முடங்கியதற்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதியை நோக்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய விமர்சனங்களைத் தொடங்கியுள்ளார்.
மோசமான விடயங்கள் நடந்திருக்கும்
ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து ரஷ்யா புதிய தடைகளை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
புடினை விமர்சித்து பேசிய அவர், "நான் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கனவே நிறைய மோசமான விடயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடின் உணரவில்லை மற்றும் நான் சொல்வது மிகவும் மோசமானது. அவர் (புடின்) நெருப்புடன் விளையாடுகிறார்!" என தெரிவித்துள்ளார்.
புதிய தடைகள் பரிசீலனை
உண்மையிலேயே மோசமான விடயங்கள் என்ன என்பதை ட்ரம்ப் குறிப்பிடவில்லை அல்லது எந்த குறிப்பிட்ட அச்சுறுத்தல்களையும் செய்யவில்லை.
ஆனால், ட்ரம்ப் இப்போது ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை பரிசீலித்து வருவதாகவும், அவர் இன்னும் தனது மனதை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |