இந்த செடியின் வேர் இருந்தால் போதும்..! வீட்டில் காந்தம் போல் பணம் ஈர்க்கும்
வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் பல செடிகளை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த செடிகளில் ஒன்றான அதன் வேரை வீட்டின் வாசலில் நட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
இந்த செடியின் வேரை வீட்டின் வாசலில் எப்படி நட வேண்டும், அதன் பலன்கள் எவ்வாறனதாக அமையும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி செடியின் வேர்
துளசி செடி லட்சுமியின் சின்னமாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
வாஸ்து சாஸ்திரத்தில், துளசி வேர் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த வேரை வீட்டின் வாசலில் தலைகீழாக தொங்கவிடுவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்.
இந்து மதத்தில், துளசி செடி மிகவும் புனிதமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு செயலிலும் வெற்றியை அடைய உதவுகிறது.
துளசி செடியின் வேரை வீட்டின் வாசலில் நட்டால், எதிர்மறை ஆற்றல் உள்ளே வராது. இது தவிர வாஸ்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
எப்படி கட்டலாம்?
காய்ந்த துளசி செடியின் வேரை எடுத்து ஒரு சிவப்பு துணியில் அரிசி மற்றும் ஒரு சிவப்பு குங்குமம் சேர்த்து கட்டவும்.
பின் இந்த கட்டப்பட்ட மூட்டையை வீட்டின் வாசலில் தொங்க விடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |