ரஷ்யாவுக்கு அனுமதி கிடையாது என துருக்கி அதிரடி: திரும்பி செல்லும் கட்டாயத்தில் போர் கப்பல்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே முக்கிய சமாதானம் பேசும் முக்கிய நாடாக துருக்கி உள்ளது.
போர் கப்பல்கள் கருங்கடலுக்கு செல்ல துருக்கி அனுமதி வழங்க மறுப்பு.
ரஷ்ய போர் கப்பல்கள் Bosphorus வழியாக கருங்கடலுக்கு செல்ல துருக்கி அனுமதி மறுத்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கை பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நாடாக துருக்கி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடாக துருக்கி இருந்தும், ரஷ்யா போர் கப்பலை Bosphorus ஜலசந்தி வழியாக கருங்கடலுக்கு செல்ல துருக்கி அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
#Turkey did not allow #Russian warships to pass through the #Bosporus Strait into the #BlackSea. "The Varyag" and "Admiral Tributs" had been waiting for permission to pass since February, but were forced to return to #Vladivostok. pic.twitter.com/CBEJ49IgtQ
— NEXTA (@nexta_tv) November 7, 2022
"தி வர்யாக்" மற்றும் "அட்மிரல் ட்ரிப்ட்ஸ்" ஆகிய இரு போர் கப்பல்களும், பிப்ரவரி முதல் Bosphorus ஜலசந்தி வழியாக கடந்து செல்ல அனுமதி கோரி பல நாட்களாக காத்து இருந்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: இரத்தம் கொட்டும் போரில் உத்திகளை மாற்றுங்கள்: புடினிடன் கெஞ்சும் ரஷ்ய கடற்படையினர்
ஆனால் துருக்கி அனுமதி வழங்க தொடர்ந்து மறுத்து வருவதால் vladivostok-க்கு கப்பல்கள் திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.