துருக்கி நிலநடுக்கம்! இடிபாடுகளில் புதைந்த குட்டிகளை தேடிய தாய் நாய்... நடந்த ஆச்சரியத்தை காட்டும் வீடியோ
துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய தனது குட்டிகளை தாய் நாய் தேடிய மனதை உருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
நாய் குட்டிகளை தேடிய தாய் நாய்
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,500-ஐ கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய தனது 2 குட்டிகளை தாய் நாய் தேடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தாய் நாய், மண்ணில் புதைந்த பகுதியை தோண்டுகிறது.
So much has got to me regarding the devastating impact the earthquake has had in Turkey, but this had me bawling ? pic.twitter.com/GbGZ4LWJes
— Kirst (@Kirst23x) February 8, 2023
நெகிழ்ச்சி
தனது குட்டிகள் உயிருடன் இருக்கும் என உறுதியாக நம்பியது. இதையடுத்து இரக்க மனம் கொண்ட நபர் ஒருவர் நாய்க்கு உதவும் வகையில் தானும் கையால் தோண்டி பார்த்த போது ஆச்சரியம் அளிக்கும் விதமாக அடுத்தடுத்து இரண்டு குட்டி நாய்களை வெளியே எடுத்தார்.
இதை பார்த்த தாய் நாயின் கண்களில் நன்றியுணர்வு எட்டி பார்த்தது.
பின்னர் மூன்று நாய்களுக்கும் இருப்பிடம் மற்றும் உணவுகளுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.