இஸ்ரேல் பயங்கரவாத நாடு..! முக்கிய நோட்டோ நாட்டின் ஜனாதிபதி பேச்சு
பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையே கடுமையான போர் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கியதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Reuters
இதற்கிடையில் தாக்குதலை கண்டித்து பஹ்ரைன் நாடாளுமன்றம் தங்களது இஸ்ரேலுக்கான தூதரை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
இதைப்போல இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த கோகோ கோலா மற்றும் நெஸ்லே நிறுவனங்களின் பொருட்களுக்கு துருக்கி தடை விதித்தது.
இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த துருக்கி ஜனாதிபதி ரசிப் தைய்யிப் எர்டோகன், ஒரு நகரையும், அதன் மக்களையும் முழுமையாக அழிக்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
(Turkish President Recep Tayip Erdoğan)REUTERS
அதே சமயம் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாக வெளிப்படையாக தெரிவிக்கிறேன்.
பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அரசியல் மற்றும் இராணுவ தளபதிகள் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் எனவும் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து துருக்கி ஜனாதிபதியின் கருத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |