Fact Check: சமீபத்திய துருக்கி நிலநடுக்கத்தில் பூமி இரண்டாக ஆழத்தில் பிளந்ததா?
துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 300 கி.மீ நீளத்தில் ஆழமாக பூமி இரண்டாக பிளந்தது என காணொளி ஒன்று வெளியாகி பீதிய கிளப்பிய நிலையில், அதன் உண்மை நிலை வெளியாகியுள்ளது.
300 கி.மீ தொலைவுக்கு இரண்டாக பிளந்த பூமி
பிப்ரவரி 20ம் திகதி துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது. பல மில்லியன் மக்கள் வீடிழந்துள்ளதுடன் பல ஆயிரம் மக்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
Turkey Syria Earthquake Caused 300 km Long Crack in Earth’s Crust#turkeyearthquake2023 #earthquake#TurkeySyriaEarthquake2023 Turkey-Syria pic.twitter.com/55PIDDmOax
— Ankita Jain (@Ankita20200) February 20, 2023
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், 300 கி.மீ தொலைவுக்கு பூமி இரண்டாக பிளந்து பள்ளமாக காணப்படுவது, துருக்கி மற்றும் சிரியா பகுதியில் நிலநடுக்கத்திற்கு பின்னர் பதிவு செய்யப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.
பல ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்த அந்த காணொளியானது சீனாவில் பதிவு செய்யப்பட்டது என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் நிலநடுக்கத்திற்கும் அந்த ஆழமான பள்ளத்திற்கும் தொடர்பில்லை என்றே கூறுகின்றனர்.
மேலும், குறித்த பள்ளமானது சீன மக்களால் Zhou Cang என அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் நீளம் சுமார் 10 கி. மீ மட்டுமே எனவும் உறுதி செய்துள்ளனர்.
@AP
மட்டுமின்றி Google Earth ஊடாக அந்த சீன பள்ளத்தை பொதுமக்களால் பார்வையிட முடியும் எனவும் கூறுகின்றனர்.
தற்போது துருக்கி நிலநடுக்கத்தில் உருவான பள்ளம் என பகிரப்பட்டுள்ள காணொளியானது 2021ல் ஒருமுறை வெளியிடப்பட்டுள்ளது எனது குறிப்பிடத்தக்கது.