துருக்கி ஆயத தொழிற்சாலையில் வெடி விபத்து:5 பேர் உயிரிழப்பு
துருக்கி ஆயத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
5 ஊழியர்கள் உயிரிழப்பு
அரசுக்கு சொந்தமான துருக்கி ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஆலையில் வேலை பார்த்த ஐந்து ஊழியர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆயுத தொழிற்சாலையில் ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வகையான வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
வெடி விபத்து
விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் நிபுணர்கள் டைமண்ட் வெடி மருந்தை வைத்து ஆராய்ச்சி செய்து இருந்த நிலையில் திடீரென இந்த பலத்த சத்தத்துடன் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பலத்த வெடி விபத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகளால் தொழிற்சாலையின் அருகே உள்ள வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன.
படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
Turkish Armed Forces