277 பயணிகள்..தரையிறங்கும்போது தீப்பிடித்த விமானம்
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தரையிறங்கும்போது தீ
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து 277 பயணிகளுடன் (11 விமானப் பணியாளர்கள்) Turkish Airlines என்ற விமானம் நேபாளத்திற்கு புறப்பட்டது.

காத்மாண்டு விமான நிலையத்தில் Turkish Airlines தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்தது.
இதனால் பயணிகள் அவசர சறுக்கு வழியாக வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அனைவரும் பாதுகாப்பாக
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கியானேந்திர பூல், விமானத்தின் வலதுபுறத் தரையிறங்கும் சக்கரத்தில் ஏற்பட்ட தீப்பொறியின் காரணமாகவே தீப்பிடித்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர், "விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்; மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. நாங்கள் தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
சுமார் இரண்டு மணிநேரம் மூடப்பட்டிருந்த விமான நிலையத்தின் ஒரே ஒரு ஓடுபாதை, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |