திமுகவை ஒரே வார்த்தையில் காலி செய்த எம்ஜிஆர், ஜெயலலிதா - ஈரோட்டில் சீறிய விஜய்
தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும்தான் போட்டி என விஜய் பேசியுள்ளார்.
விஜய் ஈரோடு பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று ஈரோட்டில் உள்ள விஜயமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதில் பேசிய அவர், "மஞ்சள், பொதுவா நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க, மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு.
ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என ஆய்வு செய்தால் ஒன்று இல்லை, ஜீரோ தான். ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள்?
மக்களுக்கு என்ன செய்வது என நினைக்காமல் விஜயை எப்படி எதிர்க்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 24 மணி நேரமும் திமுகவினரின் நோக்கம் விஜய், தவெகவை எப்படி முடக்கலாம் என்பதை பற்றி தான் இருக்கிறது.
தமிழக மக்களுக்கும், எனக்கும் இடையேயான உறவை சிலர் கெடுக்க நினைக்கின்றனர். அவதூறுகளைப் பரப்ப நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது இந்த உறவு எனக்க 10 வயதில் தொடங்கியது என்று. இந்த உறவை யாராலும் பிரிக்க முடியாது.

எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள். மக்கள் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பித்தான் நான் வந்திருக்கேன். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். என்ன கைவிட மாட்டீங்க தானே?
உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை. எனக்கு, என்மேல எல்லையில்லா பாசம் வெச்சுருக்கிற இந்த Mass தான் துணை.
இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. சலுகைகளை இலவசம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு வழங்குவது எப்படி இலவசம் ஆகும்?
அப்படியே வழங்கினாலும் ஓசி, ஓசி என மக்களை கிண்டல் என செய்கிறார்கள். கேட்க ஆள் இல்லை என நினைக்குறிங்களா? மக்களுக்கு ஒன்னுனா கேட்க இந்த விஜய் இருக்கான்.

திமுக ஒரு தீய சக்தி
நான்கூட யோசிப்பேன், எம்ஜிஆர், மேடம் ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தைச் சொல்லி திமுகவை காலி செய்தார்கள். அப்போது ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள் என்று யோசித்தேன். இப்போதான் புரிகிறது.
அவர்கள் கூறியதை மீண்டும் கூறுகிறேன். திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி.... தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும்தான் போட்டி.

நம்முடன் செங்கோட்டையன் சேர்ந்துள்ளது நமக்கு கூடுதல் பலம். அவரை போல் பலரும் நம்முடன் இணைய உள்ளார்கள். அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்" என பேசினார்.
Thank you Erode 🙏🏻 pic.twitter.com/897ADrZtA4
— Vijay (@actorvijay) December 18, 2025
இறுதியாக தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் வெள்ளி செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் விஜய் அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |