ட்விட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் நீக்கம்: எலான் மஸ்க் செயலுக்கு காரணம் என்ன?
சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் இருந்து பத்திரிகையாளர் சிலரின் கணக்குகளை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் நீக்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் கணக்குகள் நீக்கம்
கடந்த அக்டோபர் மாதம் சமூக ஊடகப் பக்கமான ட்விட்டரை உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் தொகை கொடுத்து வாங்கினார்.
ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வரும் எலான் மஸ்க், தற்போது சில பத்திரிகையாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்கை ட்விட்டர் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
Elon Musk-எலான் மஸ்க்
தற்போது ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்த பத்திரிகையாளரின் கணக்குகளில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்களை குறித்து, கடந்த மாதங்களில் எழுதி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், தனிப்பட்ட தகவல்கள் பகிர்வதை தடுக்கும் டிவிட்டரின் டாக்ஸிங்(doxxing) விதிமுறைகள், மற்ற நபர்கள் போல “பத்திரிகையாளர்களுக்கும்” பொருந்தும் என்று தெரிவித்து உள்ளார்.
Unsuspend accounts who doxxed my exact location in real-time
— Elon Musk (@elonmusk) December 16, 2022
Unsuspend accounts who doxxed my exact location in real-time
— Elon Musk (@elonmusk) December 16, 2022
அத்துடன் நாள் முழுவதும் என்னுடைய செயல்பாடுகளை விமர்சிப்பது நல்லதே, ஆனால் என்னுடைய தனிப்பட்ட நிகழ்நேர இருப்பிடத்தை பகிர்வது, மற்றும் எனது குடும்பத்தை ஆபத்தில் ஆழ்த்துவது நல்லது இல்லை. என தெரிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் விவரம்
டைம்ஸ் நிருபர் ரியான் மேக் (Ryan Mac), போஸ்ட் நிருபர் ட்ரூ ஹார்வெல் (Drew Harwell) CNN நிருபர் டோனி ஓ'சுல்லிவன் (O'Sullivan), மற்றும் Mashable நிருபர் மேட் பைண்டர் (Matt Binder) ஆகியோரின் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க கொள்கை மற்றும் அரசியலை உள்ளடக்கிய சுதந்திர ஊடகவியலாளர் ஆரோன் ரூபாரின் (Aaron Rupar) கணக்கும் இடைநிறுத்தப்பட்டது.
Criticizing me all day long is totally fine, but doxxing my real-time location and endangering my family is not
— Elon Musk (@elonmusk) December 16, 2022
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்த கருத்தில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ரியான் மேக்-கின் கணக்கு உட்பட பல முன்னணி பத்திரிக்கையாளரின் கணக்குகள் நீக்கப்பட்டு இருப்பது கேள்விக்குறியானது மற்றும் துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து சரியான மற்றும் தெளிவான காரணத்தை ட்விட்டர் நிறுவனம் வழங்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.