இருவரின் உயிரை பறித்த இந்திய அணி: இளம் ரசிகர்கள் எடுத்த விபரீத முடிவு!
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூரில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக்கோப்பை 2023
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வந்தது.
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அரையிறுதிப்போட்டியில் விளையாடிய 4 அணிகளில் இருந்து 2 அணிகள் வெற்றிப்பெற்று இறுதிபோட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.
அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை வென்றது.
இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களையும் நிலைகுழைய செய்தது.
இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் இரண்டு பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு மாநிலத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துக்கொண்ட இரண்டு இளைஞர்கள்
அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 23 வயதான ராகுல் லோஹர், மனவேதனை அடைந்து தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக லோஹரின் மைத்துனர் உத்தம் சுர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் திங்கள்கிழமை காலை பாங்குரா சம்மிலானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒடிசாவின் ஜாஜ்பூரில், ஞாயிற்றுக்கிழமை இரவு போட்டி முடிந்த சிறிது நேரத்தில் மற்றொரு 23 வயது இளைஞன் பிஞ்சர்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் ஏற்கனவே "emotional disorder syndrome" என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் "நாங்கள் இயற்கைக்கு மாறான மரணம் வழக்கை பதிவு செய்துள்ளோம், மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |