பள்ளியில் இரண்டு மாணவிகள் ஒரே மாதிரி இருந்ததால் உருவான சந்தேகம்: DNA பரிசோதனையில் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
தென்னாப்பிரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் புதிதாக இணைந்த மாணவி ஒருவர், ஏற்கனவே அங்கு படித்துவந்த ஒரு மாணவியைப்போலவே இருந்ததால், அதிகாரிகள் அவர்களுக்கு DNA பரிசோதனை செய்துள்ளார்கள்.
ஒரே மாதிரி தோற்றமளித்த இரு மாணவிகள்
1997ஆம் ஆண்டு பிறந்த Miche Zephany Sheldon என்னும் மாணவி, 2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலுள்ள St. Michael's School என்னும் பள்ளியில் இணைந்தபோது, அங்கு ஏற்கனவே படித்து வந்த Cassidy என்னும் பெண்ணும் அவரும் ஒரே மாதிரி தோற்றம் உடையவர்களாக இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அவர்களுக்கு DNA பரிசோதனை செய்துள்ளார்கள்.
Credit: SWNS
DNA பரிசோதனையில் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
DNA பரிசோதனை முடிவுகள் அதிரவைக்கும் சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆம், Zephanyயும் Cassidyயும் சகோதரிகள் என்பது சோதனையில் தெரியவந்தது.
அதைவிட அதிர்ச்சியளிக்கும் விடயம், Zephanyயை இதுவரை வளர்த்துவந்த பெற்றோர் அவரது உண்மையான பெற்றோர் அல்ல என்பதுடன், பிறந்து மூன்று நாட்களே ஆன தன்னை தன் வளர்ப்புத்தாயான Lavona Solomon மருத்துவமனையிலிருந்து திருடிவந்துள்ளார் என்பதும் Zephanyக்குத் தெரியவந்தது. Lavonaவுக்கு கருத்தரிப்பதில் பிரச்சினைகள் இருந்ததால் செவிலியர் போல நடித்து மருத்துவமனையிலிருந்து குழந்தையைத் திருடிவந்துள்ளார் அவர்.
Credit: SWNS
அவரது கணவரான Michaelக்கு Zephany தன் மகள் அல்ல எனத் தெரியாது. அவர் Zephanyயை அன்புடன் வளர்த்துவந்துள்ளார்.
உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து Zephanyயின் வளர்ப்புத் தாயான Lavona Solomon சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு தந்தைகள் கரம்பிடித்து அழைத்துவந்த மணப்பெண்
தற்போது 26 வயதாகும் Zephanyக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தன் சொந்தப் பெற்றோரைக் கண்டுபிடித்துவிட்டாலும், ஆரம்பத்தில் அவர்களுடன் எளிதாக பழகமுடியாமல் தவித்துள்ளார் Zephany.
Credit: SWNS
தன் திருமணத்தின்போது, தன் மீது அக்கறையும் அன்பும் காட்டி வளர்த்த தன் வளர்ப்புத் தந்தையான Michael ஒரு பக்கமும், தன் சொந்த தந்தையான Morne Nurse இன்னொரு பக்கமும் தன் கைபிடித்து அழைத்துவர மணமகளாக நடைபயின்றார் Zephany.
அத்துடன், தன் வளர்ப்புத்தாயான Lavona மீதும் அவர் வெறுப்புக் காட்டவில்லை. Lavona இம்மாதம் 18ஆம் திகதிதான் தன் பத்தாண்டு தண்டனைக்காலம் முடிந்து வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: SWNS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |