ஆற்றில் கவிழ்ந்த படகு..சிறுவன் உட்பட இருவர் மாயமானதால் பரபரப்பு
இந்திய மாநிலம் ஒடிசாவின் பிராமணி ஆற்றில் படகு கவிழ்ந்து சிறுவன் உட்பட இருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படகு கவிழ்ந்து சிறுவன் உட்பட இருவர் மாயம்
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஆல் பகுதியில் உள்ள பிராமணி ஆற்றில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் ஒரு சிறுவன் உட்பட குறைந்தது இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.
சுமார் 30 பேர் மற்றும் 10 பைக்குகளுடன் படகில் ஏகமானியாவிலிருந்து ராஜ்நகரின் கெரடகர்க்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
உயிருக்கு போராடியவர்களை மீட்ட உள்ளூர்வாசிகள்
இதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றினர். இது தொடர்பாக பொலிசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டபோதிலும், இருவர் ஆற்றில் காணாமல் போயுள்ளனர்.
இரண்டு பேரில் ஒருவன் சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தற்போது தேடுதல் பணியில் தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.