புடினின் உத்தரவுபடி மியான்மருக்கு மோப்ப நாய்கள் உட்பட 120 பேர்..அவசர சூழ்நிலை அமைச்சகம் அறிவிப்பு
மியான்மர் நாட்டிற்கு 120க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களை ரஷ்யா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,700ஐ தண்டிய உயிரிழப்பு
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பலியானோர் எண்ணிக்கை 1,700ஐ தண்டியுள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவின்படி 120க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ இரண்டு குழுக்கள் ரஷ்யாவில் இருந்து கிளம்பியுள்ளன. ரஷ்ய அவசர சூழ்நிலைகள் அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
மியான்மர் தலைநகரில் மீட்புப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற இரண்டு ரஷ்ய விமானங்கள் வந்தடைந்ததாக, அந்நாட்டு அரசு ஊடகமான MRTV செய்தி வெளியிட்டது.
பணியாற்றத் தொடங்கிய மீட்புக்குழு
ரஷ்யா அனுப்பிய குழு மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான மண்டலேவுக்கு சென்றது. அங்கு ட்ரோன் ஆபரேட்டர்கள் மற்றும் நாய் கையாளுவார்கள் உட்பட 30 பேர் கொண்ட ஒரு மேம்பட்ட பிரிவு, மிகவும் பேரழிவிற்குள்ளான பகுதிகளில் பணியாற்றத் தொடங்கியது.
ரஷ்ய மீட்புப்படை மண்டலேயில் இடிபாடுகளில் சிக்கிய ஒரு பெண்ணை மீட்க, சீன சகாக்களுடன் இணைந்து பணியாற்றியதாக Emergency Situations Ministry தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மியான்மரின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன், முக்கிய நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |