அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியை புறக்கணிக்கும் 2 பெண்கள்: யார் அவர்கள்?
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் மேலும் ஒரு சிறு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றிய உரையை புறக்கணிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சியின் இரண்டு பெண் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இரு பெண் தலைவர்கள்
அவர்கள் இருவரும் முஸ்லிம் தலைவர்கள். அமெரிக்க காங்கிரஸில் மின்னசோட்டாவின் பிரதிநிதி இல்ஹான் ஒமர் (Ilhan Omar) மற்றும் மிச்சிகன் பிரதிநிதி ரஷிதா தாலிப் (Rashida Tlaib) ஆகிய இருவரும் தான் மோடியின் உரையை புறக்கணிக்கின்றனர்.
இல்ஹான் அமெரிக்க அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய தலைவராகவும் உள்ளார். தொடர்ந்து இந்தியாவை விமர்சித்து வருகின்றனர்.
Twitter/AP
மோடியின் உரையில் கலந்து கொள்ளாததற்கு இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களே காரணம் என்று இருவரும் தெரிவித்தனர். மோடி போன்ற தலைவர் நமது நாட்டின் தலைநகரில் மேடையேற்றுவது வெட்கக்கேடானது எனக் கூறியுள்ளனர்.
சிறுபான்மையினரை ஒடுக்கும் மோடி அரசாங்கம்
"மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், முஸ்லிம்கள் மற்றும் மத சிறுபான்மையினரை ஒடுக்குதல், பத்திரிக்கையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் அனைத்தும் மோடியின் ஆட்சியில் நடக்கிறது. இதை ஏற்க முடியாது" என்று ரஷிதா தாலிப் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சிறுபான்மையினரை ஒடுக்குவதாகவும் இல்ஹான் ஓமர் குற்றம் சாட்டினார். மோடி அரசாங்கம் வன்முறை இந்து தேசியவாத குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை மௌனமாக்க முயற்சிக்கிறது" என்று இல்ஹான் ட்வீட் செய்துள்ளார்.
இன்று இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். உரையில் கலந்து கொள்வதற்குப் பதிலாக, மனித உரிமைக் குழுக்களின் முன் மோடியின் அடக்குமுறை மற்றும் வன்முறைக் கணக்குகளை விவரிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
PM Modi, United States, boycott
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |