பிலிப்பைன்சை துவம்சம் செய்த Bualoi புயல்: 400,000 பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்சை துவம்சம் செய்த Bualoi புயல், மூன்று உயிர்களை பலிவாங்கியுள்ளது.
Bualoi புயல்
பிலிப்பைன்ஸ் நாட்டில், Bualoi என பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக மரங்கள் பல வேருடன் பிடுங்கி எறியப்பட, கட்டிடங்களின் சுவர்கள் சாய்ந்துள்ளன.
ஏற்கனவே Ragasa புயலின் பாதிப்பிலிருந்து பிலிப்பைன்ஸ் முழுமையாக விடுபடாத நிலையில், தற்போது Bualoi புயலும் சேர்ந்துகொள்ள நிலைமை மோசமாகியுள்ளது.
சுமார் 400,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியும் தொடர்கின்றன.
இதற்கிடையில், பிலிப்பைன்சில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்ததாக சுமார் 2 பில்லியன் டொலர்களை அதிகாரிகள் மோசடி செய்த விடயத்தால் மக்கள் ஏற்கனவே கொந்தளித்துப்போயுள்ளார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த இரண்டு புயல்களும் தாண்டவமாடி பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |