எகிப்துக்கான கோதுமை விநியோகத்தை 4,100 கோடிக்கு கைப்பற்றிய இரு நிறுவனங்கள்
ஐக்கிய அமீரகத்தின் இரண்டு நிறுவனங்கள் இணைந்து எகிப்து நாட்டுக்கு கோதுமை விநியோகிக்கும் ஒப்பந்தம் ஒன்றை 4,100 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை
ஆண்டுக்கு 100 மில்லியன் டொலர் என ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் எனவும், உயர்தர இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை எகிப்துக்கு விநியோகிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
அபுதாபி மாகாணத்தில் செயல்பட்டுவரும் Al Dahra மற்றும் Adex ஆகிய இரு நிறுவனங்களே தொடர்புடைய 500 மில்லியன் டொலர் (ரூ.4,157 கோடி) ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
மேலும், எகிப்திய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எங்கள் பணியில் இது ஒரு வெற்றிகரமான மைல்கல் எனவும் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி சுமார் 600 ஆயிரம் டன்கள்
கடந்த 3 ஆண்டுகளில் எகிப்தில் செயல்பட்டுவரும் தங்கள் பண்ணைகள் ஊடாக 180 ஆயிரம் டன் கோதுமையை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக Al Dahra நிறுவனம் தெரிவித்துள்ளது.
அல் தஹ்ரா நிறுவனம் ஏற்கனவே எகிப்தில் 28 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் செய்து நாட்டின் உணவுப் பாதுகாப்பை நிலைநிறுத்த முக்கியப் பயிர்களை உற்பத்தி செய்து வருகிறது.
மேலும், உலகளவில், அல் தஹ்ராவின் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி சுமார் 600 ஆயிரம் டன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |