விண்வெளியில் தந்தை., பூமியில் மகன்; வீடியோ அழைப்பில் பேசிய நெகிழ வைக்கும் தருணம்
விண்வெளியில் இருந்து தந்தையும் பூமியில் இருந்துகொண்டு அவரது மகனும் வீடியோ கான்பரன்சில் பேசும் அபூர்வ காட்சி வெளியாகியுள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த வாய்ப்பு இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி மற்றும் அவரது மகன் அப்துல்லா சுல்தான் அல் நெயாடி இடையேயான வீடியோ மாநாடு தற்போது வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி தனது மகன் அப்துல்லா சுல்தான் அல் நெயாடியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் விண்வெளிப் பயணம் குறித்து பேசினார். இவர்களின் உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை முகமது பின் ரஷித் விண்வெளி மையம் (@MBRSpaceCentre) ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. வீடியோவில், அப்துல்லா தனது தந்தையை மரியாதையுடன் வரவேற்று, 'இந்த பூமியில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும்?' அவர் கேட்டார். அதற்கு, சுல்தான் அல் நெயாடி, 'பூமியில் எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் தான்' என்று தனது மகனின் பெயரைக் குறிப்பிட்டு கூறினார்.
Watch the heart-warming moment UAE astronaut Sultan Al Neyadi speaks to his sons from the International Space Station
— The National (@TheNationalNews) August 11, 2023
“Will you bring something special from space?” pic.twitter.com/GjXM4TF3lZ
அதையடுத்து 'விண்வெளியில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், நாம் இங்கு மைக்ரோ கிராவிட்டி சூழலில் இருக்கிறோம். நீங்கள் விரும்பும் விஷயங்களை நாங்கள் செய்ய முடியும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறக்க முடியும்' என்று சுல்தான் அல் நெயாடி தனது மகனுடன் பேசிக்கொண்டே அங்கு தான் மிதப்பதை நடைமுறையில் காட்டினார்.
விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி தனது தந்தை மற்றும் அவரது ஆறு குழந்தைகளில் இருவருடன் 'எ கால் ஃப்ரம் ஸ்பேஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விண்வெளி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பேசினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
'ஒரு மகன் தன் தந்தையைப் பற்றி பெருமைப்பட வேண்டிய சந்தர்ப்பம்'.. 'அருமையான உரையாடல்' என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி மேலும் நான்கு பேருடன் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாத அறிவியல் பணியை முடித்த பின்னர் செப்டம்பர் 1-ஆம் திகதி பூமிக்கு திரும்ப தயாராகி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
UAE astronaut Sultan Al Neyadi, International Space Station, Abdulla Sultan Al Niyadi, UAE astronaut video conference with son