புடினின் ஜாக்கெட்டை அணிந்துகொண்ட ஐக்கிய அரபு அமீரக அதிபர்! விவாதத்தை தூண்டிய வைரல் வீடியோ
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் புடினின் ஜாக்கெட்டை அணிந்திருக்கும் மற்றும் கைகுலுக்கிய வீடியோ வைரலாகிவருகிறது.
உக்ரைன் போரால் உலக நாடுகளிடையே அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் இது விமர்சங்களை தூண்டியுள்ளது.
உக்ரைன் போர் தொடர்பாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது தனிப்பட்ட ஜாக்கெட்டை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் பின் சயீத்துக்கு வழங்கிய வீடியோ இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் அக்டோபர் 11 அன்று அபுதாபியின் ஆட்சியாளர் முகமது பின் சயீத்துக்கு விருந்தளித்தார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது, கடுமையான குளிரைத் தாங்க முடியாமல் இருந்த சயீத்துக்கு தனது தனிப்பட்ட ஜாக்கெட்டைக் கொடுத்து அழைத்துச் சென்றார் புடின்.
வீடியோவில், புடின் பின் சயீத்துடன் செல்வதையும், கைகுலுக்குவதையும் காணலாம். மேலும், சயீத் தனது காரில் புறப்படும் வரை புடின் காத்திருந்து வழியனுப்பியுள்ளார்.
Russia’s President Vladimir Putin ?? due to cold weather, gives his personal jacket ? to Sheikh Mohamed bin Zayed ?? and sees him off all the way to his car …
— حسن سجواني ?? Hassan Sajwani (@HSajwanization) October 12, 2022
This is how well respected Sheikh Mohammed is … Thank you President Putin for honoring my President ?? pic.twitter.com/q5Y3z3fvvh
ரஷ்ய-அமீரக உறவை பாராட்டிய புடின்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முக்கியமானவை என்று புடின் பாராட்டினார்.
எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த ரஷ்யாவை உள்ளடக்கிய OPEC+ குழுவிற்கு அமீரகம் ஆதரவளிப்பதையும் அவர் பாராட்டினார்.