நடுக்கடலில் மூழ்கிய ஐக்கிய அரபு அமீரக கப்பல்! நடந்ததை விளக்கிய ஈரான்
30 பேருடன் சென்ற ஐக்கிய அரபு அமீரக சரக்குக் கப்பல் ஈரான் கடற்கரையில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்களை ஏற்றி வந்த ஐக்கிய அரபு அமீரக சரக்குக் கப்பல், ஈரானின் Assaluyeh துறைமுகத்திலிருந்து 30 மைல் தொலைவில் கடலில் மூழ்கியதாக ஈரான் கடல்சார் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
கப்பலில் இருந்து 30 பேரும், லைப் ஜாக்கெட்டுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, ஐக்கிய அரபு அமீரக கப்பல் மூழ்கியதாக அவர் கூறினார்.
மேலும், கப்பலை மீட்க ஹெலிகாப்டர் உதவியை கோரியுள்ளோம், மீட்பு கப்பல்களுடன், இரண்டு இழுவை கப்பல்களும் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
Head of Maritime Safety and Protection Department of Bushehr Ports and Maritime Administration:
— Middle East News (@Draganov313) March 17, 2022
An Emirati cargo ship sank 30 miles from Assaluyeh an hour ago, and search operation was launched for 30 crew members. pic.twitter.com/28QavTsOGZ