ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தில் பிறந்த பாலஸ்தீன குழந்தை., Emarat என பெயர் சூட்டிய பெற்றோர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய தினத்தில் பிறந்த பாலஸ்தீன பெண் குழந்தைக்கு, பெற்றோர் Emarat என்று பெயர் சூட்டினர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிலையில், அபுதாபியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தைக் குறிக்கும் நள்ளிரவில் ஒரு பாலஸ்தீன தம்பதியினர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
பாலஸ்தீன தம்பதி
நள்ளிரவு 12.01 மணியளவில், பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த அஷ்ரப் கெத்ர் மற்றும் ல்மயிஸ் முகமது தம்பதியினர் அல் ஐனில் உள்ள புர்ஜீல் ராயல் மருத்துவமனையில் தங்களின் நான்காவது குழந்தை பிறந்ததை கொண்டாடினர். இதனால் பெருமிதம் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு எமரத் (Emarat) என்று பெயரிட்டனர்.
khaleejtimes
டாக்டர் முகமது சுபி அல் சாத், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர், 2.900 கிலோ எடையுள்ள பெண் குழந்தையைப் பிரசவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் அதன் தேசிய தினத்தை முன்னிட்டு பிறந்த அனைத்து குழந்தைகளை வரவேற்றுள்ளன. அதில் இந்த குழந்தையும் ஒன்று.
எகிப்திய தம்பதி
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மற்றொரு மரியாதையாக, இதே தேசிய தினத்தில் எகிப்திய தம்பதிகளான மணால் முகமது மற்றும் மஹ்மூத் முஹரேப் 3.810 கிலோ எடையுடன் சரியாக 12 மணியளவில் சயீத் என்ற ஆன் குழந்தையை பெற்றெடுத்தனர். இந்த எகிப்திய தம்பதிக்கு சயீத் ஐந்தாவது குழந்தை.
khaleejtimes
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
United Arab Emirates Union Day 2023, Palestinian baby on uae National Day, UAE Union Day, Emarat, Palestinian baby Emarat among first newborns on National Day