உதயநிதி துணை முதலமைச்சரானால் மிகப்பெரிய ஆபத்து: ஹெச்.ராஜா கருத்து
உதயநிதி துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
ஹெச்.ராஜா பேசியது
தமிழக மாவட்டமான அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சனாதனம் என்ன என்பதை உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.
சனாதனத்தில் உள்ள உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவை தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. சனாதனத்தின் மீதான எதிர்ப்பு 180 ஆண்டுகளுக்கு முன்பாகவே உள்ளது.
சனாதனத்தில் கூறியுள்ளது போல கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்திற்கு எதிராக பேசி வருகிறார்.
அவர் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை அவசரமாக பொலிஸ் சுட்டுக்கொன்றது ஏன்?
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று எதிர்க்கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |