உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக கொடூர சட்டம்: ஐ.நா கண்டனம்
உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக புதிய மசோதாவில் அந்நாட்டின் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.
ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக சட்டம்
உகாண்டா நாட்டில் கடந்த சில மாதங்களாக ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக, பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் LGBTQ குழுக்கள் மற்றும் மேற்கத்திய சக்திகளின் கண்டனத்தைத் தூண்டும் வகையில், உலகின் மிகக் கடுமையான ஓரினச்சேர்க்கைக்கு எதிராக புதிய சட்டங்களில், அந்நாட்டின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி கையெழுத்திட்டுள்ளதாக உகாண்டா அறிவித்துள்ளது.
@ndtv
ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்திலுள்ள முக்கிய அம்சங்களை, யோவேரி முசெவேனி நேற்று அறிவித்துள்ளார்.
மரண தண்டனை
அதன்படி ஓரின சேர்க்கையாளர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்பவர்களை, குற்றவாளியாக அரசு எடுத்து கொள்ளாது என கூறியுள்ளார்.
@afp
ஆனால் ஓரின சேர்க்கையாளர்கள் உடலுறவில் ஈடுபட்டால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மோசமாக உடலுறவில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என யோவேரி முசெவேனி அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
ஜோ பைடன் கண்டனம்
’ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான இந்த சட்டம், உலக நாடுகளின் மனித உரிமை மீறல்’ என்று ஜோ பைடன் உகாண்டா அரசை கடுமையாக சாடியுள்ளார்.
@abc
மேலும் உகாண்டாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு மனித உரிமை மீறல்கள், அல்லது ஊழலில் ஈடுபடும் நபர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது பற்றியும், நிர்வாகம் பரிசீலிக்கும் என்று அவர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
@reuters
இதனை தொடர்ந்து ’உலகிலேயே இது மோசமான சட்டம்’ என்று, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆணையர் வோல்கர் டர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.