பாடசாலைக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல்... கொத்தாக பலியான பலர்: பதறவைக்கும் தகவல்
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடையவர்கள் என கூறப்படும் பயங்கரவாதிகள் குழு ஒன்று மேற்கு உகாண்டாவில் பாடசாலை ஒன்றில் நுழைந்து நடத்திய தாக்குதலில் கொத்தாக பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
25 பேர்கள் வரையில்
தொடர்புடைய பாடசாலையானது காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது எனவும், முதற்கட்ட தகவலில் 25 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
@getty
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தங்களுக்கு தொடர்பிருப்பதாக அறிவித்துள்ள கூட்டு ஜனநாயகப் படைகளின் உறுப்பினர்களே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். Mpondwe பகுதியில் அமைந்துள்ள Lhubirira மேல்நிலைப் பள்ளியைத் தாக்கியதுடன், மாணவர்களுக்கான விடுதியை தீக்கிரையாக்கிவிட்டு உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுவரை 25 சடலங்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு புவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்களை மீட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 மாணவர்களை உயிருடன்
ஆனால் இந்த தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர்கள் மாணவர்கள் என பொலிசார் தகவல் வெளியிடவில்லை. இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டு விருங்கா தேசிய பூங்கா பகுதி நோக்கி தப்பியவர்களை ராணுவத்தினர் துரத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
@PA
கடந்த ஏப்ரல் மாதம் இதே ADF தீவிரவாத அமைப்பு கிராமம் ஒன்றில் திடீர் தாக்குதல் முன்னெடுத்ததில் 20 பேர்கள் வரையில் கொல்லப்பட்டனர். மேலும், 1988ல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் புகுந்த இந்த ADF அமைப்பு, அங்குள்ள 80 மாணவர்களை உயிருடன் எரித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |