இரண்டாவது முறை பிரித்தானிய தம்பதியரின் கதவை தட்டிய அதிர்ஷ்டம்
பிரித்தானியாவில் வாழும் ஒரு தம்பதியர் ஏற்கனவே ஒரு முறை லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு வென்றுள்ள நிலையில், மீண்டும் அதிர்ஷ்டம் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது!
இரண்டாவது முறை கதவைத் தட்டிய அதிர்ஷ்டம்
பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டிலுள்ள Talgarth என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர்கள் ரிச்சர்ட் (Richard Davies and wife Faye) தம்பதியர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் தம்பதியருக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர்களுக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது.
அதிர்ஷ்டம் இரண்டாவது முறையும் கதவைத் தட்டும் என தாங்கள் நம்பியதாக தெரிவிக்கும் ரிச்சர்ட் தம்பதியர், நம்பிக்கை இருந்தால் எதுவும் நடக்கும் என்கிறார்கள்.

ரிச்சர்ட் பொருட்கள் டெலிவரி செய்யும் வேன் சாரதியாகவும், அவரது மனைவி Faye, மன நல ஆலோசகராகவும் பணிபுரிந்துவரும் நிலையில், லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தாலும், தங்கள் பணியைத் தொடர இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
அத்துடன், என் கணவர் என்னுடைய ’lucky charm’ என்று கூறும் Faye, தாங்கள் லொட்டரிச்சீட்டு வாங்குவதையும் விடப்போவதில்லை என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |