இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் விமானம் தாங்கி போர் கப்பல்: களமிறங்குகிறதா நேட்டோ படைகள்?
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்களது போர் கப்பலை அனுப்புவது குறித்து பிரித்தானியா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவை சுக்குநூறாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலை நடத்த தொடங்கிய இஸ்ரேல் காசா நகரை ஏவுகணையால் முற்றிலும் சீர்குலைத்துள்ளது.
AP
இதற்கிடையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக யூ.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு என்ற விமானம் தாங்கி போர் கப்பலை அமெரிக்கா காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது.
இந்த போர் கப்பல் போர் விமானங்களை கொண்டு இருப்பதுடன், அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் திறனும் கொண்டது. இந்த போர் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
பிரித்தானியா ஆலோசனை
இந்நிலையில் தான் பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்களது 'R08 குயின் எலிசபெத்' (R08 Queen Elizabeth) என்ற போர் கப்பலை காசா நோக்கி அனுப்பவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
WIKIPEDIA
இந்த போர் கப்பல் மொத்தம் 60 போர் விமானங்களை தாங்கக்கூடியது.
அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும் தங்களது போர் கப்பலை இஸ்ரேலுக்கு ஆதரவாக அனுப்பி வைத்தால் நேட்டோ நாடுகள் இணைந்து ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தை எதிர்ப்பதாகவே பார்க்கப்படும்.
நேட்டோ இவ்வாறு போரில் காலடி எடுத்து வைத்தால் ஈரான் மூலமாக ரஷ்யாவும் நேட்டோ படைகளை எதிர்த்து சண்டையிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |