லண்டன் சாலையில் கத்திக்குத்து: 10 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்
பிரித்தானியாவின் பிரண்ட் ஃபோர்ட் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கத்திக்குத்து
லண்டனின் பிரெண்ட் ஃபோர்ட்(Brentford) பகுதியில் உள்ள ப்ரெண்ட்விக் கார்டன்ஸில்(Brentwick Gardens), உள்ளூர் நேரப்படி புதன்கிழமை 5:15(BST) மணியளவில் நபர் ஒருவர் பலத்த கத்தி குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இருப்பினும் சம்பவ இடத்திற்கு அவசர மருத்துவ சேவைகள் சென்றடைவதற்கு முன்பு, அந்த நபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது ஊடுருவும் மர்ம நபர்கள் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் புகாரை தொடர்ந்து நடந்துள்ளது.
10 பேர் கைது
இந்நிலையில் ப்ரெண்ட்விக் கார்டன்ஸில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
UKNIP
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 7 ஆண்களும் 3 பெண்களும் காவலில் தொடர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கொல்லப்பட்டவருக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
UKNIP
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
நகரில் நடந்துள்ள இந்த கத்திக்குத்து படுகொலை சம்பவம் உண்மையில் அதிர்ச்சியூட்டிய கூடியது என மெட் பொலிஸை சேர்ந்த பிகோ போரூசன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை பொலிஸார் தொடங்கி இருப்பதாகவும், சாட்சிகள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.