பாங்காக்கில் போதைப்பொருளுடன் சிக்கிய பிரித்தானிய இளைஞர்: பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்
பிரித்தானிய இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாங்காக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய இளைஞர் கைது
பாங்காக்கில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 23 வயது பிரித்தானிய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்ஜ் வில்சன் என்ற பக்கிங்ஹாம்ஷரை சேர்ந்த இளைஞர், சுமார் 9.1 கிலோ எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளுடன் பாங்காக்கில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
வெளிநாட்டு கும்பல் ஒன்று போதைப்பொருளுடன் ஹோட்டலில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தாய்லாந்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது சூட்கேஸில் இருந்த பொருட்கள் குறித்து தனக்கு தெரியாது என கைது செய்யப்பட்ட வில்சன் மறுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |