திருமண வலைதளம் மூலம் நடந்த மோசடி: இந்திய வம்சாவளி அமெரிக்கரை குறிவைத்த பிரித்தானிய வாழ் இந்தியர்
அமெரிக்காவை சேர்ந்த 71 வயது இந்திய வம்சாவளி அமெரிக்க வாழ் குடிமகள் லூதியானாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் திருமண தளத்தில் அறிமுகம்
அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த 71 வயது ரூபிந்தர் கவுர் பந்தர் (Rupinder Kaur Pandher) என்ற பெண், இங்கிலாந்தில் வசிக்கும் 75 வயது இந்திய வம்சாவளி நபர் சரண்ஜித் சிங் கிரேவால்(Charanjit Singh Grewal) இருவரும் ஆன்லைன் திருமண வலைதளத்தில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர்.
அப்போது ரூபிந்தர் கவுர் பந்தர் சொத்து தகராறு ஒன்றில் சிக்கி இருப்பதை சரண்ஜித் சிங் கிரேவால் கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து, சொத்து பிரச்சினையில் அவருக்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்த சரண்ஜித் சிங் கிரேவால், இந்தியாவின் லூதியானா பட்டியில் கிலா ராய்ப்பூரில்(Kila Raipur in Ludhiana Patti) வசிக்கும் சுக்சீத் சிங் என்ற தட்டச்சு பணியாளரை அறிமுகம் செய்துள்ளார்.
பணத்திற்காக சதி திட்டம்
இதனை தொடர்ந்து ரூபிந்தர் கவுர் பந்தரின் பணத்தை சதித்திட்டம் போட்டு பறிக்க சரண்ஜித் சிங் கிரேவால் திட்டமிட்டுள்ளார்.
மேலும் லூதியானாவில் உள்ள சுக்சீத் சிங்கிடம் ரூபிந்தர் கவுர் பந்தரை கொன்றால் ரூ.50 லட்சம் தருவதாகவும், வெளிநாட்டில் குடியேற உதவுவதாகவும் ரண்ஜித் சிங் கிரேவால் உறுதியளித்துள்ளார்.
பின்னர் கடந்த ஜூலை மாதம் ரூபிந்தர் கவுர் பந்தரை ரண்ஜித் சிங் கிரேவால் லூதியானாவுக்கு வரவழைத்துள்ளார்.
மேலும் ஜூலை 18ம் திகதி சிங் அவரது வீட்டில் ரூபிந்தர் கவுர் பந்தரை பேஸ்பால் மட்டையால் அடித்து கொன்று, அவரின் உடலை எரித்து வடிகாலில் ஒன்றில் வீசியுள்ளார்.
விசாரணையில் தெரியவந்த உண்மை
ஜூலை 24, சகோதரி கமல் கவுர் கைரா, ரூபிந்தர் கவுர் பந்தரை தொடர்பு கொள்ள முடியாததை அடுத்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் ரூபிந்தர் கவுர் பந்தர் கடைசியாக சிங்கின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ரூபிந்தர் கவுர் பந்தரை கொலை செய்ததையும் சிங் ஒப்புக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |