உலகில் பரவும் உக்ரைன் சோர்வு: பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
உலகம் முழுவதும் ”உக்ரைன் போர் சோர்வு” ஏற்படும் அபாயம் இருப்பதாக வெள்ளிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு தீடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களை கடந்தும் முடிவடையாத நிலையில், இந்த போர் தாக்குதலானது தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரங்களில் தீவிரமடைந்து வருகிறது.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென உக்ரைனிய தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நீடித்து வரும் உக்ரைன் போரினால் உலகை சுற்று ”உக்ரைன் போர் சோர்வு” ஏற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
He is in Ukraine again @BorisJohnson @ZelenskyyUa pic.twitter.com/qqsnNIaRjE
— Iuliia Mendel (@IuliiaMendel) June 17, 2022
இத்தகைய கடினமான சூழ்நிலைக்கு மத்தியில், பிரித்தானியா முழுவதுமாக தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்க வேண்டியது மிக முக்கியம் எனத் தெரிவித்தார்.
அத்துடன் ரஷ்யா அங்குலம் அங்குலமாக உக்ரைனிய பகுதிகளை கைப்பற்றி வரும் நிலையில், இந்த போர் தாக்குதலில் உக்ரைன் நிச்சயமாக வெல்லும் என்ற எங்களுக்கு தெரிந்த உண்மை நாங்கள் வெளிகாட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.
உக்ரைன் சோர்வு ஏற்படுகையில், நீண்ட காலத்திற்கு நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுவது மிகவும் முக்கியம், மேலும் அவர்களுக்குத் தேவையான மூலோபாய ஆதரவினை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்" என்று ஜான்சன் கூறுகிறார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தெற்கு உக்ரைன் மற்றும் டான்பாஸ் நகரங்களை முழுவதுமாக கைப்பற்ற முடிந்தால், அது "பேரழிவு" என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்ட... சாம்பல் கழுகு ட்ரோன்கள்: முடிவை மாற்றிக் கொண்ட அமெரிக்கா
பிப்ரவரி 24 முதல் புடின் பெற்ற எல்லாவற்றிலிருந்தும் ரஷ்யர்களை வெளியேற்றுவதற்கான அவர்களின் லட்சியத்தில் பிரித்தானிய உக்ரேனியர்களுக்கு ஆதரவளிக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
PHOTO: PA