கூகுள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிரித்தானிய அரசு
பிரித்தானியாவின் Competition and markets Authority (CMA) Google மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் மூலம், பதிப்பாளர்கள் (Publishers) தங்கள் உள்ளடக்கத்தை Google-ன் AI சுருக்கங்களில் (AI Summaries) பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
கடந்த ஆண்டு, Google-க்கு Strategic Market Status வழங்கப்பட்டதால், CMA-விற்கு குறிப்பிட்ட விதிமுறைகளை விதிக்கும் அதிகாரம் கிடைத்தது.
புதிய விதிமுறைகள் மூலம், பதிப்பாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தின் மீது அதிக கட்டுப்பாடுகளை பெறுவார்கள்.

கூகுளின் AI சுருக்கங்கள், செய்தி நிறுவங்களின் Click-Through Rate-ஐ குறைந்துவிட்டதாக CMA தெரிவித்துள்ளது.
இனி கூகுள் தனது AI சுருக்கங்களில் மூலத்தை (Source attribution) தெளிவாக காட்ட வேண்டும்.
"கூகுள் தனது தேடல் முறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப, பதிப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்று CMA தலைவர் Sarah Cardell கூறியுள்ளார்.
Google, பதிப்பாளர்கள் தங்கள் உள்ளடக்கம் AI சுருக்கங்களில் இடம்பெற வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க புதிய search controls-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால், AI சுருக்கங்களில் இடம்பெறாமல் இருந்தால், அந்த தளங்களுக்கு traffic குறையக்கூடும் என்ற அச்சத்தை News Media Assosiation (NMA) வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில், Google 90 சதவீத தேடல்களை கட்டுப்படுத்துகிறது. அதன் search crawler, AI overviews மற்றும் Gemini AI assistant-க்கு தரவுகளை வழங்குகிறது. இதனால், CMA-வின் புதிய விதிமுறைகள், பதிப்பாளர்களுக்கு அதிக bargaining power-ஐ வழங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |