புடின் முன்னாள் மனைவி, ரகசிய காதலி, அவரது பாட்டி உட்பட பலருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடை விதிப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னாள் மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் புடினின் தற்போதைய மனைவியாக கருதப்படும் அலினா கபயேவா ஆகியோர் மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விளாடிமிர் புட்டினின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நீண்ட காலமாக வதந்தி பரப்பப்பட்ட காதலி உட்பட உள் வட்டத்தின் ஒரு டஜன் உறுப்பினர்களுக்கு எதிராக பிரித்தனையா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகத்தின் அறிவிப்பின்படி, புடினின் முன்னாள் மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னயா, புடினின் ரகசிய காதலியாக கருதப்படும் அலினா கபேவா மற்றும் கபீவாவின் பாட்டி அன்னா ஜாட்செப்லினா உட்பட புடினின் நெருங்கிய உறவு வட்டாரத்தில் உள்ளவர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் விதிக்கப்படுகிறது.
ஆணை 'வழுக்கை' என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல்! பிரித்தானிய தீர்ப்பாயம் அதிரடி
புடினின் உத்தியோகபூர்வ சொத்துக்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் இரண்டு சோவியத் கால கார்களை விட சற்று அதிகமாகவே இருந்தது என்று வெளியுறவு அலுவலக அறிக்கை குறிப்பிட்டது. மேலும் தனிப்பட்ட முறையில் ஒரு படகு மற்றும் கருங்கடல் கடற்கரையில் உள்ள பரந்த புட்டினின் அரண்மனை மாளிகை உட்பட அவரது செல்வம் மிகப்பெரியது என்று கூறியுள்ளது.
பற்றி எரியும் ரஷ்யா! வரலாற்று சிறப்பு மிக்க கலாச்சார கட்டிடத்தில் பயங்கர தீ!
தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியல்:
அலினா கபாயேவா, அலினா கபாயேவாவின் பாட்டி அன்னா ஜாட்செபிலினா, லியுட்மிலா ஓச்செரெட்னா, இகோர் புடின்(புடினின் உறவினர் மற்றும் ரஷ்ய தொழிலதிபர் மற்றும் பெச்செங்கா சர்வதேச துறைமுகத்தின் இயக்குனர்), மிகைல் புடின் (ரஷ்ய தொழிலதிபர் மற்றும் ஜனாதிபதியின் உறவினர்), ரோமன் புடின் (உறவினர்), மிகைல் ஷெலோமோவ் (ரஷ்ய வணிக உரிமையாளர் மற்றும் புடினின் உறவினர்), அலெக்சாண்டர் பிளெகோவ் (புடினின் நெருங்கிய நண்பர்), மிகைல் கிளிஷின் (வங்கி ரஷ்யாவின் நிர்வாக இயக்குனர்), விளாடிமிர் கோல்பின், யூரி ஷமலோவ் (புடினின் முன்னாள் மருமகன் கிரில் ஷமலோவின் சகோதரர்), விக்டர் க்மரின் ஆகியோர் மீது பிரித்தானிய அரசு பொருளாதாரத் தடையை தற்போது புதிதாக விதித்துள்ளது.
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ்., விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்!
"இன்றைய பொருளாதாரத் தடைகள் புடினின் உள் வட்டத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்களையும் நிதியாளர்களையும் தனிமைப்படுத்துகின்றன, புடினின் உக்ரைன் மீதான விவேகமற்ற படையெடுப்பைத் தொடர்வதால் அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது" என்று பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.