இந்தியாவில் 9 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் - பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்தியாவில் 9 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது இந்தியா-பிரித்தானியா இடையிலான வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
"உயர்தர கல்விக்கான தேவை இந்தியாவில் மிக அதிகம். அதனால், பிரிட்டிஷ் பண்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை நிறுவுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இது 2035-ஆம் ஆண்டுக்கான நமது பார்வையை நிறைவேற்றும் ஒரு முக்கியமான படியாகும்" என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், Lancaster பல்கலைக்கழகம் பெங்களூருவில் வளாகம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Surrey பல்கலைக்கழகம் குஜராத்தின் GIFT City-யில் வளாகம் அமைக்க முதற்கட்ட அனுமதி பெற்றுள்ளது.
இந்த முயற்சி, இந்தியா-பிரித்தானியா இடையேயான கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை மேம்படுத்தும்.
இத்திட்டம் இந்திய மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வியை தாய்நாட்டிலேயே பெரும் வாய்ப்பை வழங்கும்.
Further cementing 🇮🇳-🇬🇧 education cooperation.
— Randhir Jaiswal (@MEAIndia) October 9, 2025
PM @narendramodi & PM @Keir_Starmer met with Vice Chancellors of top UK universities. Nine leading UK universities will be establishing their campuses in India. pic.twitter.com/BtK3W1b3l3
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |