பிரித்தானியாவில் காட்டுத் தீயால் எரிந்த பெரும்பகுதி., 2025 தொடக்கத்திலேயே சாதனை அளவு பதிவு
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரித்தானியாவில் காட்டுத் தீயால் எரிந்த பரப்பளவு கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
Global Wildfire Information System தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 29,200 ஹெக்டேர் (292 சதுர கிமீ) பகுதி எரிந்துள்ளது - இது 2019-ஆம் ஆண்டு பதிவான 28,100 ஹெக்டேர் சாதனை அளவை மிஞ்சுகிறது.
மார்ச் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் நீடித்த வறண்ட, சூரிய ஒளி அதிகமான காலநிலை, தீ பரவலுக்கேற்ற சூழலை உருவாக்கியது.
வறண்டுள்ள தாவரங்கள் எளிதில் தீப்பற்றுவதால், இவ்வருடம் ஏற்கனவே 80-க்கும் மேற்பட்ட பாரிய காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் மழை இல்லாததால் தாவரங்கள் மிகவும் வறண்ட நிலையில் இருந்தன. இதனால் தீ பரவல் வேகமாக நடைபெற்றது.
குறிப்பாக ஸ்காட்லாந்தின் Galloway Forest Park பகுதியில் மட்டும் சுமார் 65 சதுர கிலோமீட்டர் எரிந்தது. வேல்ஸில் Cwm Rheidol பகுதியில் 50 சதுர கிலோமீட்டர் தீக்கிரையானது.
இவை தவிர, ஸ்கை தீவு, ஆரன் தீவு மற்றும் பியூட் தீவிலும் தீப்பரவல்கள் பதிவாகின.
இது போன்ற ஆரம்ப பருவ தீப்பரவல்கள் இயற்கை மண்டலங்களில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
மேலும், எதிர்காலத்தில் அதிகரிக்கும் வெப்ப நிலை மாற்றம் காரணமாக, அதிக தீவிரமான காட்டுத் தீ நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பூமி வெப்பமாவதன் தாக்கமாக, எதிர்காலத்தில் இவ்வாறு தீவிரமான காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரிக்கும் என்பதில் முந்தைய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK wildfires 2025, UK wildfire record 2025, Global Wildfire Information System UK, Climate change and wildfires UK, Galloway Forest Park fire 2025, UK fire weather conditions, Wildfire season UK 2025, Fire risk UK climate change, Early spring wildfires UK, Environmental impact of wildfires UK