லொட்டரியில் கிடைத்த ரூ.3000 பணத்தை வைத்து மீண்டும் விளையாடிய பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த ரூ. 100 கோடி அதிர்ஷ்டம்!
துபாய் Mahzooz டிராவில் பிரித்தானிய பெண்ணிற்கு ரூ 100 கோடி அளவில் பிரம்மாண்ட பரிசு விழுந்துள்ளது.
பிரம்மாண்ட பரிசு
Inger (42) என்ற பிரித்தானிய பெண் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனது கணவருடன் வசித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் Mahzooz டிராவில் (எமிரேட்ஸ் லொட்டோ) Dh10 மில்லியன் (ரூ.100,10,37,862) பரிசு விழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு Dh35 பரிசு விழுந்த நிலையில் அந்த பரிசு பணத்தை அப்படியே வைத்திருந்து தற்போது அதை வைத்து மீண்டும் Mahzooz டிராவில் பங்கேற்ற நிலையிலேயே அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
gulfnews
எப்போதும் போலவே இயல்பாக இருப்பேன்
Inger கூறுகையில், Mahzoozல் இருந்து எனக்கு போன் வந்த போது நான் சந்தேகமடைந்ததோடு, யாரோ விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என நினைத்தேன். பின்னர் என் தோழியிடம் இது குறித்து சொன்ன போது அவர் ஓன்லைனில் பார்த்து எனக்கு தான் பிரம்மாண்ட பரிசு விழுந்தது என்பதை உறுதி செய்து அழுது கொண்டே அதை என்னிடம் சொன்னாள்.
இது மிகப்பெரிய வெற்றி, இவ்வளவு பெரிய பணம் எனக்கு கிடைத்துள்ளதால் என்னை அது மாற்றிவிடாது, நான் எப்போதும் போலவே இயல்பாக இருக்க விரும்புகிறேன் என கூறினார்.
சிகையலங்கார நிபுணராக பரிசு பணத்தை கொண்டு அழகு நிலையத்தை திறக்க Inger திட்டமிட்டுள்ளார்