வேலை கிடைக்காமலே பிரித்தானியாவிற்கு செல்லும் Visa வாய்ப்புகள்...
வேலை கிடைக்கும் முன்பே இளம் பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பிரித்தானியாவிற்கு செல்லமுடியும்.
இளம் பட்டதாரிகள் மற்றும் திறமையான தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்து வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் விசா வாய்ப்புகளை பயன்படுத்தலாம்.
இதற்கான சில விசா வகைகளை இங்கே பாப்போம்...
1. பட்டதாரி விசா (Graduate Visa):
பிரித்தானியாவில் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் தங்கி வேலை செய்ய அனுமதிக்கப்படும்.
PhD பட்டதாரிகளுக்கு இந்த விசா 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
இதை நீட்டிக்க முடியாது, ஆனால் Skilled Worker Visa போன்ற மற்ற விசாக்களுக்கு மாறலாம்.
2. Youth Mobility Scheme:
இந்த விசாவில் 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்களுக்கு (சில நாட்டவர்களுக்கு 35 வயது வரை) 2 ஆண்டுகள் வரை பிரித்தானியாவில் தங்கி வேலை செய்ய அனுமதி அளிக்கப்படும்.
இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க £2,530 சேமிப்பு இருக்க வேண்டும்.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து நாட்டு நபர்கள் விசாவை கூடுதலாக 1 ஆண்டு நீட்டிக்கலாம்.
3. India Young Professionals Scheme:
இந்தியர்களுக்கான இந்த விசா 18-30 வயதுக்குள் உள்ளவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை வேலை செய்ய அனுமதி அளிக்கப்படும்.
குலுக்கலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மட்டுமே இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
4. Global Talent Visa:
இந்த visa கல்வி, ஆராய்ச்சி, கலை, கலாச்சாரம், மற்றும் டிஜிட்டல் துறைகளில் முன்னணி நபர்களுக்கானது.
இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க நிபுணத்துவத்தை உறுதிசெய்ய ஒப்புதல் தேவையானது.
5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் மற்றும் நிரந்தர குடியிருப்பு பெற வாய்ப்பு உள்ளது.
5.High Potential Individual Visa:
கடந்த 5 ஆண்டுகளில் அமுல் பெற்ற தகுதியான பல்கலைக்கழக பட்டதாரிகள் இதை பெற முடியும்.
இந்த விசா 2-3 ஆண்டுகள் செல்லுபடியாகும்.
இதனை நீட்டிக்க முடியாது ஆனால் மற்ற விசாக்களுக்கு மாறலாம்.
இந்த விசா வாய்ப்புகள் பல திறமையானவர்களுக்கு பிரித்தானியாவில் வாழ மற்றும் வளர வழிவகுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK work visa options, UK work visa without job offer, Uk job offer