ட்ரம்ப் அளிக்கும் நெருக்கடி... G20 மாநாட்டில் முடிவெடுக்க இருக்கும் உக்ரைன் நட்பு நாடுகள்
தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் G20 மாநாட்டில் ட்ரம்பின் சமாதான ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இருப்பதாக உக்ரைன் நட்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.
G20 மாநாட்டில்
குறித்த தகவலை பிரித்தானியாவின் பிரதமர் ஸ்டார்மர் உறுதி செய்துள்ளார். எப்போதும் இல்லாத கடும் நெருக்கடியை ட்ரம்ப் நிர்வாகம் அளிக்கத் தொடங்கிய நிலையில்,

தங்களது வரலாற்றில் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றை எதிர்கொண்டு வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்ததை அடுத்தே G20 மாநாட்டில் முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி தலைவர்களுடன் ஜெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து உக்ரைனின் நண்பர்கள் மற்றும் கூட்டாணியும் அந்த நாட்டிற்கு நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பதாலையே, இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனைகளை முன்னெடுக்கலாம் என்ற முடிவுக்கு தலைவர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிரது.
அமெரிக்காவின் சமாதான ஒப்பந்தத்தில், ரஷ்யா இதுவரை ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை பலமுறை உக்ரைனால் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது.

மட்டுமின்றி, ரஷ்யாவின் முடக்கப்பட்ட 300 பில்லியன் யூரோ தொகையில், 100 பில்லியன் யூரோ உக்ரைனுக்கு மறுகட்டமைப்புக்காக வழங்கப்படும், ஆனால் மறுகட்டமைப்பு பணிகள் அனைத்தையும் அமெரிக்காவே செய்ய இருப்பதால், அந்தத் தொகையை அமெரிக்காவே கைப்பற்றும் என கூறுகின்றனர்.
மட்டுமின்றி, ரஷ்யாவிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஐரோப்பா முறையாக தலையிடவில்லை என்றால், அது பெரும் ஆபத்தாக முடியும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
உரிமையும் இல்லை
ஏற்கனவே பாதுகாப்பை உறுதி செய்வதாக உறுதி அளித்து உக்ரைனில் இருந்து அணு ஆயுதங்களை அகற்றிவிட்டு, தற்போது இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள சமாதான ஒப்பந்தமானது உக்ரைனுக்கு மிக ஆபத்தான தருணமாக மாற உள்ளது என ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம், ஆனால் அதை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது என்பது முக்கியம் என கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா தான் படையெடுத்த நாட்டிலிருந்து எந்தவொரு சலுகைகளையும் பெறுவதற்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை, எந்தவொரு ஒப்பந்தத்தின் விதிமுறைகளும் உக்ரைன் மட்டுமே இறுதியில் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பிரதமர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், உக்ரைன் பல மாதங்களாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது, அதே நேரத்தில் ரஷ்யா பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு அதன் கொடூர வெறியாட்டத்தைத் தொடர்கிறது என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |