அணை பேரழிவுக்கு பின்னால்... ரஷ்யாவின் இன்னொரு கோர முகம்... உக்ரைன் காற்றில் கலக்கும் விஷ வாயு
உக்ரைனில் உலகின் மிகப்பெரிய அம்மோனியா குழாய் வெடித்து விஷ வாயு காற்றில் கலப்பதாக பகீர் தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.
மேக மூட்டமாக வாயு காற்றில்
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள Masiutovka கிராமத்தில் செல்லும் குழாய் வெடித்து அப்பகுதி எங்கும் மேக மூட்டமாக வாயு காற்றில் கலப்பது காணொளி ஒன்றில் அம்பலமாகியுள்ளது.
Credit: East2West
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக குறித்த குழாய் வெடிப்பு நேர்ந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. தெற்கு உக்ரைனில் டினீப்பர் நதியில் அமைந்துள்ள நோவா ககோவ்கா அணையை சேதப்படுத்திய விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதே நிலை தான் தற்போது அம்மோனியா குழாய் வெடித்த விவகாரத்திலும் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஷ்யாவின் Togliatti பகுதியில் இருந்து 1,534 மைல்கள் அளவுக்கு இந்த அம்மோனியா குழாய் விரிவடைந்து காணப்படுகிறது.
@getty
மட்டுமின்றி வோல்கா நதி ஊடாக மூன்று கருங்கடல் துறைமுகங்களையும் இணைக்கிறது. அம்மோனியா குழாய் வெடிப்பு உறுதியான தகவல் என்றால் அதில் இருந்து வெளியாகும் எந்த நச்சு வாயுக்களும் ஒரு பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதுடன், அது மிகப் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல்
இதனிடையே உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள போர் முகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மூன்று கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
@EPA
அம்மோனியா குழாய் வெடித்த விவகாரத்திற்கு முதன்மை காரணம் ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல் என்றே ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது போரின் விளைவுகள் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, இது பயங்கரவாதம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
அவர்கள் அதை முன்கூட்டியே தங்கள் கைகளால் செய்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். புடின் உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து அந்த குழாய் செயல்படவில்லை என்றே கூறப்படுகிறது.
@reuters