உக்ரைனை மிரட்டிய ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய விமானப்படை
உக்ரைன் மீது ஒரே நாள் இரவில் 38 ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் விமான படை தெரிவித்துள்ளது.
நீடிக்கும் உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 2வது ஆண்டை தொடவுள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள போரில் இரு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரம், இருப்பிடம் ஆகிய அனைத்தையும் இழந்து வாடி வருகின்றனர்.
ட்ரோன் தாக்குதல்
கடந்த சில நாட்களாக உக்ரைன் ரஷ்யா இடையிலான தாக்குதல் மந்தமடைந்து இருக்கும் நிலையில், இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா அனுப்ப ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது.
Overnight #Ukraine was attacked by 38 Shahed drones, 29 of them were shot down, the Air Force said. pic.twitter.com/3eKGultiys
— NEXTA (@nexta_tv) November 18, 2023
இதையடுத்து உக்ரைனிய விமானப்படை வெளியிட்ட தகவலில், ரஷ்யா அனுப்பிய 38 Shahed ட்ரோன்களில் 29 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |