இந்தப் போர் இப்படித்தான் முடியவேண்டும்., அது தான் வெற்றி: சபதம் எடுக்கும் உக்ரைன்!
ரஷ்யாவுடனான இந்த போர் இப்படித்தான் முடிவுக்கு வரவேண்டும், அதுதான் உண்மையான வெற்றி என உக்ரைன் சபதம் எடுத்துள்ளது.
ரஷ்யாவிடான் இழந்த அனைத்து பகுதிகளையும் முழுமையாக மீட்டெடுத்து போரில் வெற்றி பெறவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் (Andriy Yermak) கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான பதிவில், "உக்ரைன் நாட்டு எல்லையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை முழுமையாக மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே போர் முடிவுக்கு வர வேண்டும். அது தான் நமது வெற்றி. நாகரீக உலகுடனான நமது பொதுவான வெற்றி.
எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று உக்ரைன் தன்னை மட்டும் பாதுகாக்கவில்லை. உக்ரைன் இன்று ஐரோப்பாவின் தெர்மோபைல்ஸ் ஆகும்" என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைனின் டான்பாஸ் (Donbas) மற்றும் மைகோலைவ் (Mykolaiv) பகுதியில் புடினின் ரஷ்ய படை வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து, ஆண்ட்ரி யெர்மக் நாட்டை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.