ரஷ்யாவின் அணுமின் நிலையத்தை உக்ரைன் தாக்கவில்லை, அது போலி பிரச்சாரம் - உக்ரேனிய மையத் தலைவர்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையத்தைத் தாக்கியதாக வெளியான தகவல் போலியானது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
டிரோன் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையமான Rosatom, டிரோன் விமானம் தொடர் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் மூன்று ஊழியர்கள் காயப்பட்டதாகவும் தெரிவித்தது.
அத்துடன் ஒரு சரக்கு துறைமுகம் மற்றும் தளத்தின் 6 உலைகளில் ஒன்றின் கூரையையும் டிரோன்கள் தாக்கியதாகவும் அது கூறியது.
போலிப் பிரச்சாரம்
மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை உக்ரேனிய டிரோன் விமானம் தாக்கியதாக ரஷ்ய அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உக்ரைன் மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஆண்ட்ரி கோவலென்கோ (Andriy Kovalenko), உக்ரேனியப் படைகள் அணுமின் நிலையத்தை தாக்கியதாக கூறப்படுவது போலிப் பிரச்சாரம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ''உக்ரைனில் இருந்து ஆலை மற்றும் அணு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருவதாக பாசாங்கு செய்து, டிரோன்கள் மூலம் ரஷ்யா நிலையத்தை தாக்குகிறது'' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |