அது ஒரு பயங்கரவாத நாடு... சர்வதேச நீதிமன்றத்தில் கொந்தளித்த உக்ரைன்
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முதன்மை நீதிமன்றத்தில் ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு என உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு
மலேசிய பயணிகள் விமானம் ஓன்று 2014ல் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை துவங்கப்பட்டது. இந்த விசாரணையின் போது தான் ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு என உக்ரைன் கொந்தளித்துள்ளது.
@AP
உக்ரைன் மீது படையெடுப்பை துவங்கிய பின்னர் சர்வதேச நீதிமன்றத்தில் முதல்முறையாக இரு நாட்டு சட்டத்தரணிகளும் சந்தித்துள்ளனர். இரு தரப்பில் இருந்தும் டசின் கணக்கான அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
16 நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தை மீறியது என வாதிட்டுள்ளது. மேலும் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய சார்பு படைகளுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவியும் அளித்துள்ளது எனவும், அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகள் மற்றும் ஊழியர்கள் மரணத்திற்கு காரணமாகவும் அமைந்தது என குறிப்பிட்டுள்ளது.
@AP
அத்துடன் கிரிமியாவில் டாடர் இனக்குழுவிற்கு எதிரான பாகுபாட்டை நிறுத்த ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது. கிரிமியாவில் 2014ல் இருந்தே ரஷ்யா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இது உக்ரேனிய நாசவேலை
வாதத்தின் தொடக்கத்தில் Nova Kakhovka அணை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்ட முக்கிய அதிகாரி ஒருவர், ரஷ்யாவே காரணம் என தெரிவித்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா இது உக்ரேனிய நாசவேலை.என குறிப்பிட்டுள்ளது.
@AFP
ரஷ்யாவால் எங்களை போர்க்களத்தில் தோற்கடிக்க முடியாது, எனவே அது பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து எங்களை அடிபணிய வைக்க முயற்சிக்கிறது. என உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது. பயங்கரவாத நாடு மட்டுமே இவ்வாறான செயலில் ஈடுபடும் எனவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.