மாஸ்கோவில் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல்; விமான போக்குவரத்து ரத்து
தலைநகர் மாஸ்கோவில் இரண்டு உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அந்த ட்ரோன்களை தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததாகவும் ரஷ்யா கூறியுள்ளது. விபத்துக்குள்ளான ஆளில்லா விமானத்தின் இடிபாடுகளால் இருவர் காயமடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன, பல விமானங்கள் 'சிவில் பாதுகாப்பு'க்காக திருப்பிவிடப்பட்டன என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
AP
ரஷ்யாவின் ஃபெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி விமான நிலையங்கள் சீர்குலைந்ததற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைகள் உக்ரைன் ட்ரோன்களின் தாக்குதல்களை சுட்டிக்காட்டுகின்றன.
ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய ரஷ்ய குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைன் தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை நன்கொடையாக வழங்கும் டென்மார்க் மற்றும் நெதர்லாந்தின் திட்டங்களுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் போரை அதிகரிக்கலாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Russia-Ukraine war, Russian Defence Ministry, Ukrainian drone attacks, Russia Capital Moscow, Drones Attack, Russia airports closed, Ukraine russia war, Putin zelensky, zelensky Putin