புடினின் பயணத்தின்போது குறிவைத்து தாக்கிய உக்ரைன்? மொபைல் இணைய சேவைகள் சீர்குலைப்பு
உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரஷ்ய இராணுவ மின்னணு ஆலை பாதிக்கப்பட்டு இணையம் சீர்குலைந்தது.
சீர்குலைந்த இணைய சேவைகள்
உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே ஒரு பாரிய இரவு நேர வான்வழித் தாக்குதலை நடத்தின.
இராணுவ மின்னணு ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மொபைல் இணைய சேவைகள் சீர்குலைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆளுநர்
ரஷ்யாவின் மின்னணு போர் அமைப்புகளுக்கான கூறுகளை உற்பத்தி செய்யும் இந்த ஆலை, அமெரிக்க மற்றும் உக்ரேனிய தடைகளின் கீழ் உள்ளது என்றும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று ஓரியோல் பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி கிளிச்ச்கோவ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "உக்ரேனிய எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள போல்கோவ் நகரத்தை குறிவைத்து பாரிய அளவிலான எதிரி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மற்றும் Bolkhovsky குறைக்கடத்தி சாதனங்கள் ஆலையை சேதப்படுத்தியது" என தெரிவித்தார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடின், குர்ஸ்க் பகுதிக்கு பயணம் செய்ததாக கிரெம்ளின் கூறியதைத் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளதாகவும், ஆனால் அவரது பயணம் இரவு நேர தாக்குதல்களுடன் ஒத்துப்போனதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மாஸ்கோ உட்பட 9 பிராந்தியங்களில் 159 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |