வடகொரிய ஆயுதங்களால் ரஷ்ய படைகளை பழி தீர்த்த உக்ரைன்: வெளிவரும் பின்னணி
வடகொரிய ராக்கெட்டுகளை பயன்படுத்தி ரஷ்ய படைகள் மீது உக்ரைன் வீரர்கள் தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய ஆயுதங்கள்
வடகொரிய ஆயுதங்களை அதன் நட்பு நாடான ரஷ்யாவின் படைகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவதாக இதுவரை தகவல் ஏதும் வெளியானதில்லை.
@getty
ஆனால் சோவியத் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட MLRS கருவிகளை உக்ரைன் வீரர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், வடகொரிய ஆயுதங்களை தங்களது துருப்புகள் பயன்படுத்த விரும்பவில்லை என்றே தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கை சென்று சேர்வதில்லை என்பதுடன், வெடிக்கவும் செய்வதில்லை என உக்ரைன் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் பல ஆயுதங்களும் 1980 மற்றும் 1990களில் உருவாக்கப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா உறுதி செய்யவில்லை
மட்டுமின்றி, அந்த ஆயுதங்களை நட்பு நாடு ஒன்று வழிமறித்து கைப்பற்றியுள்ளதாகவும், அதில் இருந்தே தங்கள் வசம் அந்த ஆயுதங்கள் வந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
@reuters
இதனையடுத்து, அந்த ஆயுதங்கள் ரஷ்யா செல்லும் வழியில் மடக்கப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. ஆனால் வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளதாக ரஷ்யா இதுவரை உறுதி செய்யவில்லை என்பதும் மறுத்தும் வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |