உக்ரைன் தானிய ஒப்பந்தம்...வாக்குறுதிகள் காப்பாற்ற வேண்டும்: மேற்கத்திய நாடுகளை சாடிய துருக்கி
உக்ரேனிய தானிய ஏற்றுமதியை அனுமதிக்க ரஷ்யாவுடன் இன்னொரு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ள துருக்கி, மேற்கத்திய நாடுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே சாத்தியம் என தெரிவித்துள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றினால்
மேற்கத்திய நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே, இனி உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என துருக்கி குறிப்பிட்டுள்ளது.
@PTI
அதுவே தீர்வாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்து வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சமீபத்தில் தொலைபேசியில் இது தொடர்பில் விவாதித்ததாக எர்டோகன் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் ஊடாக பாதுகாப்புடன் உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதில் துருக்கி முக்கிய பங்காற்றியிருந்தது. அந்த ஒப்பந்தமே, மேற்கத்திய நாடுகள் தங்கள் வாக்குஉதிகளை காப்பாற்றவில்லை என குறிப்பிட்டு, ரஷ்யா நீட்டிக்க மறுத்தது.
புதிய ஒப்பந்தம் ஒன்று
துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பாக, 2022 ஜூலை மாதம் புதிய ஒப்பந்தம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதுவே, கடந்த மாதம் கைவிடப்பட்டது. நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் நட்புறவைப் பேணி வருகிறது.
@reuters
மட்டுமின்றி, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் இருந்து துருக்கி விலகியே இருந்து வருகிறது. ஆனால் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை முன்னெடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |