உக்ரைனில் வாக்னர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர் இருவர்: அச்சத்தில் அவர்கள் குடும்பம்
உக்ரைனில் போர் சூழலில் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கிய பிரித்தானிய ஊழியர்கள் இருவர் ரஷ்யா அல்லது வாக்னர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடவுச்சீட்டுகளைக் காட்டி மிரட்டின
ஜனவரி 6ம் திகதியில் இருந்தே 28 வயதான கிறிஸ்டோபர் பாரி மற்றும் 48 வயது ஆண்ட்ரூ பாக்ஷா ஆகிய இருவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@alamy
இவர்கள் இருவரும் பக்மூத் பிராந்தியத்தில் பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறுகின்றனர். இந்த நிலையில், ரஷ்யப் படைகள் அந்த இருவரின் கடவுச்சீட்டுகளைக் காட்டி மிரட்டின. மேலும், அதில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியானது.
இதனிடையே, அவர்கள் இருவரின் ஆவணங்களையும் வாக்னர் கூலிப்படையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மனிதாபிமான உதவிகள் மேற்கொண்டுவந்த இரு பிரித்தானியர்களும் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி பாரியின் குடும்பத்தினருக்கும் குறித்த தகவலை தெரியப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பிரித்தானியர்கள் இருவரும் சண்டையில் கொல்லப்பட்டதாகவே கூறப்பட்டது.
@AP
வாக்னர் கூலிப்படையினரால்
ஆனால் பாக்ஷா குடும்பம் மேற்கொண்ட விசாரணையில், ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையினரால் அந்த இருவரும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர் என்றே தெரியவந்துள்ளது.
பிரித்தானியர்கள் இருவரும் கொல்லப்பட்ட விவகாரம் கண்டிப்பாக போர் குற்ற நடவடிக்கை என்றே பாக்ஷா குடும்பம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ரூ பாக்ஷாவின் பெற்றோர் தற்போது நியூசிலாந்தில் குடியிருந்து வருகின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பாக்ஷா மற்றும் பாரி ஆகிய இருவரும் கார் ஒன்றில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, வாக்னர் கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
@reuters
இதனிடையே, நியூசிலாந்து அரசாங்கம் இந்த விசாரணைக்கு ஆதரவளிப்பதாக பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு, 1.3 மில்லியன் பவுண்டுகள் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |