தானிய சரக்கு கப்பல்கள் வெளியேற புதிய மனிதாபிமான வழித்தடங்கள்: உக்ரைன் அறிவிப்பு
கருங்கடல் பகுதியில் மனிதாபிமான வழித்தடங்களை நாங்கள் உருவாக்குவோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ரஷ்யா
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து உணவு பொருட்களின் விலையேற்றம் மற்றும் தானிய தட்டுப்பாடு போன்றவை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இந்த இரண்டு நாடுகளும் தான் கோதுமை, சோளம் மற்றும் உணவு தானிய ஏற்றுமதியில் முதன்மை நாடுகளாக திகழ்ந்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு கருங்கடலில் இருந்து உக்ரைனிய தானியங்களை வெளியேற்றுவதில் ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து துருக்கி, ஐக்கிய நாடுகள் சபை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகியவை இணைந்து உக்ரைனிய தானியங்களை எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல் வெளியேற்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஜூலை 17ம் திகதி ரஷ்யா வெளியேறியது, மேலும் உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து வெளியேறும் அனைத்து படகுகளும் ரஷ்ய தாக்குதலுக்கு கீழ் வரும் என ரஷ்யா எச்சரித்தது.
Ukraine will create a humanitarian corridor in the Black Sea
— NEXTA (@nexta_tv) August 10, 2023
It will allow dozens of cargo ships stuck in the Black Sea ports after the start of the war to leave.
After Russia withdrew from the grain deal on July 17, it declared all ships that go to the ports of Ukraine as… pic.twitter.com/WOchxfSNvc
இதனால் உலக அளவில் மீண்டும் உணவு தானியங்களின் விலையேற்றம் தொடங்கியுள்ளது.
மனிதாபிமான வழித்தடங்கள்
இந்நிலையில் கருங்கடல் பகுதியில் உக்ரைன் மனிதாபிமான வழித்தடங்களை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மனிதாபிமான வழித்தடங்கள், போர் நடவடிக்கையால் கருங்கடல் துறைமுகங்களில் சிக்கியுள்ள சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |